Home இலங்கை சமூகம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கையை மீறிய இளைஞனுக்கு நேர்ந்த கதி

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கையை மீறிய இளைஞனுக்கு நேர்ந்த கதி

0

வெலிகம கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது, நேற்று (04) இடம்பெற்றுள்ளது.

அதன்போது, இரண்டு இளைஞர்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

14 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி: மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை

மேலதிக விசாரணை

இம்மாதம் 6ஆம் திகதி வரை கடலில் நீராடுவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்(Department of Meteorology) மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் எச்சரிக்கப்பட்டிருந்தும் இந்த இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தில் வெலிகம, கொலெதந்த பகுதியைச் சேர்ந்த அப்துல் பாஷித் என்ற 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ரணிலுக்கு பூரண ஆதரவு: லொஹான் பகிரங்க அறிவிப்பு

 

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version