Home இலங்கை குற்றம் யாழில் இருந்து வந்து வவுனியா இளைஞனை கடத்தி தாக்குதல்: மூவர் கைது

யாழில் இருந்து வந்து வவுனியா இளைஞனை கடத்தி தாக்குதல்: மூவர் கைது

0

யாழில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50
ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மூவர் கார் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு வருகை தந்து வவுனியா, புதிய பேருந்து நிலையம் முன்பாக
நின்ற வவுனியா 18 வயது இளைஞன் ஒருவரை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

அத்துடன், குடியிருப்பு
குளக்கட்டு பகுதியில் வைத்து குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தி விட்டு
அவரது வங்கி அட்டையை பறித்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் பெற்று விட்டு
தாக்குதலுக்குள்ளான இளஞனை புதிய பேருந்து நிலையம் முன்பாக இறக்கிவிட்டு
தப்பிச் சென்றுள்ளனர்.
 

விசாரணைகள் 

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில்
செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த விசாரணைகளையடுத்து, யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 முதல் 21 வயதுக்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version