Home இலங்கை சமூகம் தாய்மாமனின் மரணத்தால் தவறான முடிவெடுத்த இளைஞன் உயிர் மாய்ப்பு

தாய்மாமனின் மரணத்தால் தவறான முடிவெடுத்த இளைஞன் உயிர் மாய்ப்பு

0

யாழ்ப்பாணம் (Jaffna)- ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது தாய்மாமன் உயிரிழந்ததால் ஏற்பட்ட சோகம் காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார். 

குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (13) இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்ட  இளைஞனின் தாய்மாமன் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இறந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை

இதனை தொடர்ந்து, தனது தாய்மாமனின் மரணத்தால் இளைஞன் மனவிரக்தியில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றையதினம் தவறான முடிவெடுத்து, வீட்டுக்கு பின்னால் உள்ள இடத்தில் உயிரை மாய்த்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.

மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதுடன்  பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version