Home இலங்கை சமூகம் இந்து முறைப்படி ஆட்டுக்குட்டியுடன் திருமணம்: காதல் தோல்வியால் வினோத முடிவு..!

இந்து முறைப்படி ஆட்டுக்குட்டியுடன் திருமணம்: காதல் தோல்வியால் வினோத முடிவு..!

0

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த பகவான் சிங் என்ற 27 வயதான இளைஞர், ஆட்டுக்குட்டி ஒன்றை திருமணம் செய்துள்ளார். 

குறித்த இளைஞன் தனது காதல் தோல்வியடைந்ததால் இந்த வினோத முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்து சம்பிரதாயம் 

தான் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டியின் கழுத்தில் மாலையிட்டு, அதற்கு பொட்டு வைத்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும், அந்த ஆட்டிற்கு பூஜா என்று பெயரிட்டுள்ளதுடன் அந்த திருமண புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், “நான் இந்த ஆட்டை பல மாதங்களாக வளர்த்து வருகிறேன். அது என்னுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது. இதனால் இந்த முடிவை எடுத்துளேன்” என பகவான் சிங் தெரிவித்துள்ளார்.      

NO COMMENTS

Exit mobile version