களனி கங்கையில் மூழ்கி
பொகவந்தலாவை யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று(1) மதியம் இடம்பெற்றுள்ளது.
ஒருவர் உயிரிழப்பு
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வெல்லம்பிட்டி பகுதியில் உள்ள தேயிலைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்த
மூன்று யுவதிகளும் இரண்டு இளைஞர்களும் நேற்று மதியம் கொஹிலவத்த பகுதியில்
களனி ஆற்றங்கரைக்கு ஓட்டோவில் சென்றனர்.
ஓட்டோவின் உரிமையாளரான இளைஞர் ஒருவர் களனி ஆற்றங்கரையில் ஓட்டோவை நிறுத்திச்
சுத்தம் செய்தார்.
அந்த நேரத்தில், மேற்படி யுவதிகளில் ஒருவரான அந்த இளைஞரின் காதலியும்
தண்ணீரில் இறங்க முயன்றபோது, இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
நீரில் மூழ்கிய இளைஞர் கரைக்குத் திரும்பிய போதிலும், அவரது காதலி
காணாமல்போயிருந்தார்.
பின்னர் அவர், பொலிஸ் மற்றும் கடற்படை சுழியோடல் பிரிவின் அதிகாரிகளால்
சடலமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்த யுவதி பொகவந்தலாவையைச் சேர்ந்த 21 வயதுடையவர் என்று பொலிஸார்
தெரிவித்துள்ளார்.
