Home இலங்கை சமூகம் மொனராகலையில் தவறான முடிவெடுத்து ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு

மொனராகலையில் தவறான முடிவெடுத்து ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு

0

மொனராகலையில் (Monaragala) முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று (12) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ராமச்சந்திரன் இந்திராதேவி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

குறித்த பெண் நக்கலவத்தை பாரதி முன்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/young-woman-took-her-life-due-to-love-breakup-1731396264

NO COMMENTS

Exit mobile version