நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட
சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள்களுடன் 488 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலைப் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
மேற்படி விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 134
பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 183 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 156 பேரும்,
ஹேஷ் போதைப்பொருளுடன் 6 பேரும், கஞ்சா செடிகளுடன் 3 பேரும், போதை
மாத்திரைகளுடன் 6 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
