Home இலங்கை சமூகம் தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

0

களுத்துறை,  மத்துகம பிரதேசத்தில் அரச வைத்தியசாலையில் ஒன்டான்செட்ரான் தடுப்பூசி விஷமானதால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

23 வயதுடைய சந்தமினி திவ்யாஞ்சலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு அவரது பெற்றோரும் உறவினர்களும் நீதி கோரியுள்ளனர்.

யுவதி மரணம்

கடந்த 12 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளவதற்காக IDH வைத்தியசாலைக்கு சந்தமினி சென்றிருந்தார்.

அவரைப் பரிசோதித்த வெளிநோயாளர் பிரிவில் இருந்த வைத்தியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால் படுக்கைகள் இல்லாததால் அறைக்குள் அனுமதிக்கவில்லை.

பின்னர், நோயாளி வெளியேறத் தயாராகும் போது அவர் மயக்கமடைந்தார்.

பின்னர் நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

சந்தமினி திவ்யாஞ்சலி சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா மத்திய வித்யாலயா தேசியப் பாடசாலையில் கல்வி கற்றவராகும்.

அவர் உயிரிழக்கும் போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இறந்த பெண்ணுக்கு நீதி வழங்கவும், இதுபோன்ற ஒழுங்கற்ற செயல்களால் மேலும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் அவரது பெற்றோரும் உறவினர்களும் அதிகாரிகளை கடுமையாக வலியுறுத்துகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version