Home இலங்கை சமூகம் இலங்கையில் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இளைஞன்

இலங்கையில் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இளைஞன்

0

மாத்தறை, வெலிகம  பகுதியில் பேருந்து ஒன்றில் பயணி ஒருவர் மறந்துவிட்டு சென்ற பயணப்பையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் ரூபாய் பணத்துடனான பையை கண்டெடுத்த இளைஞன், அதனை உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

அளுத்கம பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் பணிபுரிந்த ஒருவர், வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக மாத்தறை-கொழும்பு பேருந்தில் ஏறி, பின்னர் ரத்கம பகுதியில் இறங்கியிருந்தார்.

இளைஞனின் செயல்

அப்போது அவரிடம் இருந்த கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் கொண்ட பணப்பையை அவர் பயணம் செய்த பேருந்தில் மறந்து விட்டு சென்றுள்ளார்.

இதனை அவதானித்த பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவர் அதனை பெற்று, அது குறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

பின்னர், பணப் பையின் உரிமையாளரை தொலைபேசி அழைப்புகள் மூலம் கண்டுபிடித்த இளைஞன் உரிமையாளரின் அடையாளத்தை உறுதிசெய்து, அதனை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.


பண நெருக்கடி

இந்த முன்மாதிரியான செயலுக்காக பணப் பையின் உரிமையாளர் அந்த இளைஞருக்கு பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் வழங்கியுள்ளார்.

எனினும் அந்த இளைஞன் அதை மறுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பண நெருக்கடியாக காலத்தில் இந்த  இளைஞனின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version