Home இலங்கை குற்றம் யாழில் இளைஞன் ஒருவர் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது

யாழில் இளைஞன் ஒருவர் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது

0

யாழ்.நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (11) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணை

இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் நீண்டகாலத்தின் பின் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினாக இது
கருதப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Source: https://tamilwin.com/article/youth-arrested-in-jaffna-1736579000

NO COMMENTS

Exit mobile version