Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் சோகம் – வெளிநாடு செல்ல இருந்த இளைஞன் சடலமாக மீட்பு

தமிழர் பகுதியில் சோகம் – வெளிநாடு செல்ல இருந்த இளைஞன் சடலமாக மீட்பு

0

கிளிநொச்சியில் (Kilinochchi) காணாமல் போன இளைஞர் ஒருவர் காட்டில் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

யூனியன் குளத்தைச் சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும் இளைஞரே
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞர் கடந்த 24 ஆம் திகதி வெளிநாட்டுக்குப் பயணமாக இருந்த நிலையில் ஐந்து தினங்களுக்கு முன்னர் – கடந்த 19 ஆம் திகதிமுதல் காணாமல் போனார்.

காவல்துறையினர் விசாரணை

காணாமல் போன மகனை பெற்றோர் தேடி வந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி அக்கராயன் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து
வந்த நிலையில் உறவினர்களும் இளைஞரை தேடி வந்தனர்.

இந்நிலையில் இளைஞரின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திலுள்ள காட்டில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

உடற்கூற்று பரிசோதனை

இளைஞரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

இந்தச் சம்பவம் தொடர்பில் அக்கராயன் காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version