Home இலங்கை சமூகம் யாழில் இன்றிரவு துயரம் : மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழில் இன்றிரவு துயரம் : மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

0

 யாழ்ப்பாணம் (jaffna)- ஆறுகால்மடம் பகுதியில் இன்றிரவு(16) இளைஞன் ஒருவர்
மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சங்கரத்தை – துணைவி பகுதியைச் சேர்ந்த
அருள்ஜீவன் பிரசாத் (வயது 17) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

  இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்தில்
பணிபுரிந்து வருகின்றார்.

பணிபுரியும் இடத்தில் நிகழ்ந்த அனர்த்தம்

இன்றையதினம் அங்கு பணிபுரியும்போது
அவர்மீது மின்சாரம் தாக்கியது.

இவ்வாறு மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இது குறித்து
விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version