Home இலங்கை சமூகம் காவல்துறையின் துப்பாக்கிசூட்டு பயிற்சி : வயலில் வேலை செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

காவல்துறையின் துப்பாக்கிசூட்டு பயிற்சி : வயலில் வேலை செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

0

காவல்துறையின் துப்பாக்கி சூட்டு பயிற்சியால் வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹொரணை – கும்புக பிரதேசத்தில் வயல்வெளியில் விவசாயம் செய்து கொண்டிருந்த இளைஞன் ஒருவனே காயமடைந்தவராவார்.

குறித்த இளைஞனின் கைகளில் திடீரென காயம் ஏற்பட்டதையடுத்து மின்னல் தாக்கியதாக நினைத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருப்பது தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டு பயிற்சி

வயல்வௌிக்கு அருகில் உள்ள காவல்துறை விசேட அதிரடிப்படை பயிற்சி பாடசாலையில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டு பயிற்சி காரணமாக குறித்த இளைஞனின் கையில் தோட்டா ஒன்று தாக்கியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

காவல்துறையினர் மேலதிக விசாரணை

இதன்படி, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர், ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஹொரணை – கும்புக காவல்துறை விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு பயிற்சிப் பாடசாலையில் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியின் போது குறித்த இளைஞன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version