Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு இளைஞன் படுகொலை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

முல்லைத்தீவு இளைஞன் படுகொலை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

முல்லைத்தீவு (Mullaitivu) இளைஞர் படுகொலையின் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வன்னி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் (K. Kader Masthan) தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற
படுகொலை சம்பவத்தின் பின்னணி வெளிக்காட்டப்பட்டு இப்படுபாதகத்தை செய்தவர்கள்
சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி பீடம்

மேற்படி அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “யுத்தம் முடிவடைந்த பின்னரும் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும்
பிரதேசங்களில் இடம்பெறுகின்ற இவ்வாறான நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த படுபாதக சம்பவங்கள் காரணமாக அப்பகுதி மக்கள் ஐயமும் பீதியும்
அடைந்துள்ளனர்.

ஆகவே, மக்கள் பெரும் நம்பிக்கையில் வாக்களித்து ஆட்சி பீடம் ஏறி உள்ள இந்த
அரசு இந்த நிலமைகளை கருத்திற் கொண்டு விரைவாக செயற்பட்டு குற்றவாளிகளை
கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வேண்டப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version