கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
சிவயுகன் சுகந்தினி என்ற 44 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து கிளிநொச்சி அக்கராயன் முறிகண்டி பிரதான வீதியின் அமைதி புரத்தித்திற்கு
அண்மித்த பகுதியில் இன்று (10) இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முறிகண்டி பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்
ஒன்று எதிரே வந்த காருடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
