இளைஞர் மாநாட்டு சங்கத்தின் மீது கை வைக்காதே என வலியுறுத்தி மஹரகம பகுதியில் இளைஞர்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்றையதினம்(6) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இளைஞர் விவகார அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் பாதுகாப்பு
இது தொடர்பில் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒவ்வொரு தலைமையின் கீழ் இளைஞர் கழகம் நடாத்தப்படுகின்றது.
தற்போது அந்த நடவடிகக்கை மாற்றப்பட்டு ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் இந்த கழகம் நடாத்தப்பட வேண்டும் என கூறப்படுகின்றது.
இது எமது உரிமைகளை மீறும் செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் அதிகளவான இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
