Home இலங்கை குற்றம் மட்டக்களப்பில் வணிக நிலையத்திற்குள் புகுந்து இளைஞன் மீது கத்திக்குத்து

மட்டக்களப்பில் வணிக நிலையத்திற்குள் புகுந்து இளைஞன் மீது கத்திக்குத்து

0

காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையம் ஒன்றில் நடத்தப்பட்ட  கத்திக்குத்து தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

மேலும், குறித்த தாக்குதலை நடத்திய இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த கத்திக்குத்து தாக்குதலில் 25 வயதுடைய ஹைராத் நகரிலுள்ள அஸி அஸ்பாக என்ற
இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.

வாய்த்தர்க்கம் 

காத்தான்குடி பொலிஸ் பிரிவின் காத்தான்குடி 06 அப்துல் லத்தீப் சின்னலெவ்வை
மாவத்தையிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில், சிகை
அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு உள் நுழைந்த இளைஞன் ஒருவர்
குறித்த இளைஞர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியத்தியுள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்தவர் மட்டு. போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதேவேளை, தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸ்
நிலையத்தில் சரணடைந்ததையடுத்து அவரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞனுக்கும் கத்தியால் குத்திய இளைஞனுக்கும் இடையே ஒரு
சில தினங்களாக வாய்த்தர்க்கம், கை கலப்பு இடம்பெற்று வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு
விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

[EQ3KPYB]

NO COMMENTS

Exit mobile version