Home இலங்கை குற்றம் யாழில் போதைபொருட்களுடன் இளைஞன் யுவதி கைது

யாழில் போதைபொருட்களுடன் இளைஞன் யுவதி கைது

0

யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட 550 கிராம் கஞ்சா 160மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவரும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(28) இடம்பெற்றுள்ளது.

 இளைஞன் யுவதி கைது

நீண்ட நாட்களாக போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில்
சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற வெகனார் வாகனத்தினை சோதனைக்குட்படுத்திய
போது 550 கிராம் கஞ்சா 160 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஐஸ்
போதைப்பொருளை பயன்படுத்துவதற்கு லையிற்றர் மற்றும் கண்ணாடி துண்டுடன் இளைஞனும்
யுவதியும் போதைப்பொருளை பயன்படுத்த உபயோகிக்கப்பட்ட வெகனார் வாகனமும்
புதுக்குடியிருப்பு
பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் இளவாலையை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரும் , யுவதி
ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணையின்
பின்னர் இன்றையதினம்(29) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக
புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version