Home சினிமா தங்கமகள் சீரியலை தொடர்ந்து யுவன் மயில்சாமி நடிக்கும் புதிய சீரியல்… வெளிவந்த புதிய விவரம்

தங்கமகள் சீரியலை தொடர்ந்து யுவன் மயில்சாமி நடிக்கும் புதிய சீரியல்… வெளிவந்த புதிய விவரம்

0

மயில்சாமி

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அங்கீகாரம் பெற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மயில்சாமி.

இவர் நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர், உதவி என்று கேட்போருக்கு கையில் இருக்கும் அனைத்தையும் கொடுக்கும் மனம் கொண்டவர். மயில்சாமி இறந்த பிறகு அவர் செய்த தானங்கள் குறித்து நிறைய பேர் பேசியிருந்தார்கள்.

யுவன்

மயில்சாமியின் மகன் யுவன் சின்னத்திரையில் இப்போது ஒரு இடம் பிடித்துவிட்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான தங்கமகள் சீரியல் மூலம் நாயகனாக அறிமுகமானவர் யுவன் மயில்சாமி. அந்த தொடர் எப்போதோ முடிந்துவிட்டது, அடுத்து அவர் என்ன Project கமிட்டானார் என்று நிறைய கேள்விகள் எழும்பின.

அப்போது தான் அவர் விஜய் டிவியிலேயே புதிய தொடர் கமிட்டாகி இருப்பது தெரிய வந்தது.
சுற்றும் விழ சுடரே என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் வினுஷா நாயகியாக நடிக்கிறாராம்.

தெலுங்கில் ஹிட்டடித்த சின்னி என்ற தொடரின் ரீமேக் தான் இந்த சீரியல் என கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version