Home இலங்கை குற்றம் வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு : ஒருவர் கைது

வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு : ஒருவர் கைது

0

பொலிஸாரின் உத்தரவை மீறிப் பயணிக்க முயன்ற வேன் ஒன்றைத் துரத்திச்சென்று துப்பாக்கிப் பிரயோகம் செய்த பொலிஸார் அதில் பயணித்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று(25.10.2025) மாலை கொழும்பின் புறநகர் பகுதியான இரத்மலானையில் இடம்பெற்றுள்ளது.

சாரதி சந்தேகத்தின் பேரில் கைது

கல்கிஸ்ஸை வழியாக இரத்மலானை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை செய்தபோதும் வேன் தொடர்ந்தும் பயணித்துள்ளது.

அதனையடுத்து குறித்த வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸார் இரத்மலானை கொளுமடம சந்தி அருகில் வேன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து வேனை நிறுத்தியுள்ளனர்.

அதனையடுத்து வேன் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வேனை நிறுத்தாமல் சென்ற காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version