சுட்டு படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர அல்லது ‘மிதிகம லசா’வின் நெருங்கிய நண்பரான கணேஷ் அடுத்து கொலை செய்யப்படவுள்ளதாக புலனாய்வு பத்திரிகையாளர் சாலிய டி. ரணவக்க சர்வதேச புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி வெளிப்படுத்தியுள்ளார்.
யூடியூப் சனல் ஒன்றில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை தொடர்பில் நடந்த கலந்துரையாடலிலேயே அவர் இவ்விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாதாள உலகக் குழு உறுப்பினர்களான “ஹரக் கட்டா“, “மிதிகம ருவான்”, லசந்த விக்ரமசேகர அல்லது ‘மிதிகம லசா’ ஆகியோர் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதோடு உறவினர்கள் எனவும் இதன்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சாரதியாக கணேஷ்
குறித்த விடயங்கள் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பத்திரிகையாளர்,
“கணேஷ் சாரதியாகவும் பணியாற்றி வந்துள்ளார். சன்சையின் சுந்தா என்பவரை தாக்கி சிறைக்கும் சென்றுள்ளார்.
ஹரக்கட்டா, மிதிகம ருவான், லசந்த விக்ரமசேகர ஆகியோர் இணைந்து மேற்கொண்ட போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பல குற்றச் செயல்களில் சேர்த்த சொத்துக்கள் மற்றும் பணம் முழுவதும் தமிழரான கணேஷ் வசமே காணப்பட்டுள்ளது.
ஹரக் கட்டா, மிதிகம ருவான் ஆகிய பாதாள குழுவே இணைந்து லசந்த விக்ரமசேகரவை வெலிகம பிரதேச சபைக்கு போட்டியிடவும் அவரை தலைவராக்கவும் பெரும் முயற்சியெடுத்துள்ளது.
‘மிதிகம லசா’ பிரதேச சபைத் தலைவரான பின்னர் இந்த குழுவினருடன் இருந்து ஒதுங்கியிருந்துள்ளார்.அண்மையில் லசந்த விக்ரமசேகர கணேஷூக்கு அவரின் பெயரில் ஹோட்டல் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கணேஷிடம் இந்த பணம் இருப்பதால் கட்டாயம் அடுத்து இவர் கொல்லப்படுவார் என புலனாய்வு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர அல்லது ‘மிதிகம லசா’ மாணிக்கக்கல் தோண்டும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
கொலை செய்வதற்கான திட்டம்
கெக்குனதுரோ இந்திக்க என்பவருக்கு மிதிகம லசாவை கொலை செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.
அவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் மிதிகம ருவனின் நண்பர் எனவும் தெரியவந்துள்ளது.
துப்பாக்கித்தாரிகள் அஹங்கம பகுதியில் இருந்து வந்து வெலிகம பிரதேச சபையை தாண்டி சென்று,பொல்லத்துமோதர பாலத்திற்கு அருகில் துப்பாக்கிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியில் சிசிரிவி கமராக்கள் இல்லை.
துப்பாக்கிச் சூட்டிற்காக ரிவோல்வர் வகையான துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கித்தாரி நன்றாக பயிற்சி பெற்ற ஒருவர்.
இந்நிலையில், துப்பாக்கித்தாரியின் கை விரல்களில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்தன. எவரேனும், அவரின் கையை பிடித்தால் கைரேகை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காகவே இவ்வாறு கை விரல்களில் பிளாஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மிதிகம ருவனின் ஆயுதங்களை காட்டிக்கொடுத்தது மிதிகம லசா என்ற நம்பிக்கையில் குறித்த கொலையை மேற்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்திய தொலைபேசி அழைப்பு
இந்தியாவில் இருந்து லசந்தவின் மனைவிக்கு கடந்த 21 ஆம் திகதி வந்த தொலைபேசி அழைப்பில் 22 ஆம் திகதி லசந்தவை கொல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியும் அவரை எங்கும் போக வேண்டாம் என தெரிவித்திருந்த நிலையில், பின்னர் மனம் மாறிய அவர் கெப்வாகனத்தில் தனது சாரதியுடன் வழமையாக வரும் வழியை விடுத்து சபைக்கு சென்றுள்ளார்.
லசந்த விக்ரமசேகரவுக்கும் இந்தியாவில் இருந்து தொலைபெசி அழைப்புகள் வந்துள்ள நிலையில் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
https://www.youtube.com/embed/p6jxoEKIhnkhttps://www.youtube.com/embed/p6jxoEKIhnk
