Home இலங்கை சமூகம் சரிகமபவிலிருந்து திடீரென வெளியேறிய இலங்கை பாடகி – காரணம் இது தான்

சரிகமபவிலிருந்து திடீரென வெளியேறிய இலங்கை பாடகி – காரணம் இது தான்

0

பிரபலமான சரிகமப இசை நிகழ்ச்சியில் (Sa Re Ga Ma Pa) பங்கேற்ற இலங்கைப் பாடகி சினேகா சரிகமபவிலிருந்து வெளியேறி நாட்டை வந்தடைந்துள்ளார்.

ஆடை மீதான விமர்சனங்கள் தன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதால் சரிகமப நிகழ்விலிருந்து வெளியேறியதாக மலையகத்தை சேர்ந்த பாடகி சினேகா தெரிவித்துள்ளார்.

சரிகமப இசை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.  

சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் 

தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான ZEE தமிழ் தொலைக்காட்சியில் இலங்கை – மலையகத்தைச் சேர்ந்த சினேகா கலந்துகொண்டு சிறப்பான பாடல்களைப் பாடி பாராட்டைப் பெற்று வந்தார்.

சரிகமபவின் ஒவ்வொரு பாடல் சுற்றிலும் மலையகத்தைச் சேர்ந்த சினேகா உடுத்தும் ஆடைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன.

எனது ஆடைகள் தொடர்பில் வெளியான விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாகினேன். அதனால் சரிகமபவில் என்னால் பாடலை பாடமுடியவில்லை என பாடகி சினேகா தெரிவித்தள்ளார்.

சிறந்த முறையில் பாடமுடியவில்லை

சரிகமப குழுவினர் உள்ளிட்ட அனைவரும் எனக்கு ஆதரவளித்து விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் பாடலைப் பாடு என்று ஊக்கமளித்தனர்.

இருப்பினும் என்னால் பாடல் சுற்றில் சிறந்த முறையில் பாடமுடியவில்லை.

இதனாலேயே நான் வெளியேறி வந்துள்ளேன் என மலையகத்தை சேர்ந்த பாடகி சினேகா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version