Home இலங்கை சமூகம் ஈழத்தை புகழ்ந்த சரி கம பா பிரபலங்கள்: கிளிநொச்சிக்கு கொடுத்த வாய்ப்பு

ஈழத்தை புகழ்ந்த சரி கம பா பிரபலங்கள்: கிளிநொச்சிக்கு கொடுத்த வாய்ப்பு

0

வடக்கு கிழக்கு வன்னி விழிப்புணர்வற்றோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஒருநாள் பொழுது” கலைநிகழ்வு விவேகாநந்த நகர் கிளிநொச்சியில் அமைந்திருக்கின்ற அவர்களுடைய அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி புகழ் பாடகர்கள் மற்றும் ஈழத்து கலைஞர்கள் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடாத்தினர்.

கடந்த கால யுத்தத்தினால் பார்வைகளை இழந்து வாழ்விற்காக போராடி வருகின்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து ஆற்றுப்படுத்தும் முகமாகவும், வன்னிநாதம் என்கிற இசைக்குழு உருவாக்கத்தை நோக்கமாக கொண்டும் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

அதனைதொடர்ந்து, நிகழ்வில் பங்கு பற்றிய தென்னிந்திய பாடகர் புருசோத்தமன் மற்றும் அக்சயா ஆகியோர் தமது அனுபவங்களை ஐபிசி தமிழுடன் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்கள்…

 

https://www.youtube.com/embed/Q9OI8YhlP7E

NO COMMENTS

Exit mobile version