ஜீ தமிழ்
சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்தபடியாக தமிழ் தொலைக்காட்சிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் டிவி ஜீ தமிழ்.
இந்த தொடருக்கு பெரிய ரீச் கிடைத்தது என்றால் செம்பருத்தி சீரியல் மூலம் தான். கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா நடித்துள்ள இந்த தொடர் டிஆர்பி ரேஸில் ஆதிக்கம் செலுத்தியது.
சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து திடீரென வெளியேறியுள்ள பிரபல நடிகை.. ரசிகர்கள் ஷாக்
ஆனால் இந்த தொடர் முடிந்த பின்னர் வேறு எந்த ஒரு சீரியலுக்கும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. டாப் 10 பட்டியலில் ஜீ தமிழ் சீரியல்கள் பெரும்பாலும் இடம் பிடிப்பது இல்லை.
முடிந்த தொடர்
ஜீ தமிழும் டிஆர்பியில் டாப் இடத்தை பிடிக்க போராடி வருகிறார்கள். சுத்தமாக வரவேற்பு குறையும் தொடர்களை அதிரடியாக முடித்து உடனே புதிய சீரியலை களமிறக்கிவிடுகிறார்கள்.
தமிழில் உருவாகும் தொடர்களை தாண்டி டப்பிங் தொடர்களையும் ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர். தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த மனசெல்லாம் தொடரை இப்போது முடிவுக்கு கொண்டு வந்துவிட்டனர்.
259 எபிசோடுகளுடன் மனசெல்லாம் சீரியல் இன்றோடு முடிவுக்கு வந்துவிட்டது.
