Home உலகம் புடின் அழிந்து போகட்டும்…! நத்தார் உரையில் ஜெலென்ஸ்கி ஆவேசம்

புடின் அழிந்து போகட்டும்…! நத்தார் உரையில் ஜெலென்ஸ்கி ஆவேசம்

0

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழிந்து போகட்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் விழா உரையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தாலும் உக்ரைன் மக்கள் பண்டிகை காலத்தில் நம்பிக்கையால் ஒன்றுபட்டுள்ளனர்.

முக்கியமான இடங்கள்

ரஷ்யா மிக முக்கியமான இடங்களை ஆக்கிரமிக்கவும் அல்லது குண்டு வீசவோ முடியாது.

இன்று, நாம் அனைவரும் ஒரே கனவைப் பகிர்ந்து கொள்கின்றோம் அத்தோடு அனைவருக்கும் ஒரு விருப்பத்தை பகிர்ந்து கொள்கின்றேன்.

அவர் அழிந்து போகட்டும் என்று நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே நினைத்துக் கொள்ளலாம் ஆனால் நாம் கடவுளிடம் ஒன்றைக் கேட்கின்றோம்.

உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் அதற்காக நாங்கள் போராடுகின்றோம் அத்தோடு அதற்கு ஜெபிக்கின்றோம்.

அமைதி ஒப்பந்தம்

முழு குடும்பமும் ஒரே இடத்தில் கூடும்போது அது மகிழ்ச்சி அளிக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த அமெரிக்கா முயற்சித்து வரும் நிலையில் அந்நாடு தயாரித்த 20 அம்ச திட்டம் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் பெரும்பாலானவற்றை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஏற்றுக் கொண்ட நிலையில் அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் புடின் அழிந்து போகட்டும் என ஜெலன்ஸ்கி பேசியது போர் தொடருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version