Home இலங்கை அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு!

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு!

0
image

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு இன்று (16) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் ஒன்பது இலட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து ஐம்பத்து மூன்று (999,053) பயனாளி குடும்பங்களுக்கு,

ஒன்பது பில்லியனுக்கும் அதிகமான தொகை (ரூ. 9,181,696,250)  வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளது.

அதேவேளை, திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இரண்டு இலட்சத்து பதின்மூன்று ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து பயனாளி குடும்பங்களுக்கு (213,335 )  இரண்டு பில்லியனுக்கும் அதிகமான தொகை,  (ரூ. 2,120,856,250)  செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த கொடுப்பனவுகளை பயனாளிகள் நாளை (17) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது. 

Source: https://samugammedia.com/aswesum-payment-will-be-deposited-into-bank-accounts-today-1789539141

NO COMMENTS

Exit mobile version