Home இலங்கை அரசியல் உடல்நிலை சீரின்மையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜா

உடல்நிலை சீரின்மையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜா

0

தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று (19.10.2024) மாலை அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாவை சேனாதிராஜா

மேலும், தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் எமது ஊடகம் அவரது உறவினர்களை தொடர்புகொண்டு கேட்டபோது சிகிச்சையின் பின்னர் தற்போது அவரது உடல்நிலை சீராகி வருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/ex-mp-mavai-senathiraja-in-hospital-1729353256

NO COMMENTS

Exit mobile version