Home இலங்கை ஆளுநர் பதவி விலகல் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியதாக சரத் அபேகோன்

ஆளுநர் பதவி விலகல் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியதாக சரத் அபேகோன்

0
image

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனப் பேராசிரியர் சரத் அபேகோன் தெரிவித்துள்ளார். 

கண்டிப் பகுதியில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த பதவியை ஏற்கும் சந்தர்ப்பத்திலேயே, மிகக் குறுகிய காலத்திற்குள் தான் இதிலிருந்து விலகப் போவதாக ஜனாதிபதிக்குத் தெரிவித்திருந்ததாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

எவ்வாறாயினும், ‘டித்வா’ சூறாவளி நிலைமை காரணமாக மத்திய மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, தனது முடிவை இதுவரையில் பிற்போட்டிருந்ததாகச் சரத் அபேகோன் குறிப்பிட்டுள்ளார். 

முற்றிலும் தனிப்பட்ட காரணத்தினால் தான் தனது பதவியிலிருந்து விலகுவதாகவும், இதற்கு எவரும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். 

இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தான் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகப் பேராசிரியர் சரத் அபேகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/governors-resignation-sarath-abeykoon-says-letter-sent-to-president-1784294971

NO COMMENTS

Exit mobile version