Home இலங்கை இந்திய மீனவர்களின் 90 படகுகளை கடலில் மூழ்கடிக்க தீர்மானம்!

இந்திய மீனவர்களின் 90 படகுகளை கடலில் மூழ்கடிக்க தீர்மானம்!

0
image

 

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட சுமார் 90 இந்திய மீன்பிடிப் படகுகளை கடலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடபகுதி, குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகள், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் மயிலிட்டி துறைமுகத்தில் கடந்த சில வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து வருடங்களாக மயிலிட்டி துறைமுகத்தில் தரித்து நிற்கும் குறித்த படகுகளில் சில, உரிய சட்ட நடவடிக்கைகளின் பின்னர் அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளன.

மேலும், சில படகுகள் இலங்கை மீனவர்களின் தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள சுமார் 90 படகுகளை கடலில் புதைத்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீண்ட காலமாக மயிலிட்டி துறைமுகத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் குறித்த படகுகளால் ஏற்படும் இடப்பற்றாக்குறை மற்றும் துறைமுகப் பயன்பாட்டில் ஏற்படும் சிக்கல்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/indian-fishermen-decided-to-sink-90-boats-into-the-sea-1790154950

NO COMMENTS

Exit mobile version