Home இலங்கை இரத்தக் களரியான பிறந்தநாள் விழா! வாக்குவாதம் முற்றி சகோதரன் வெட்டிக்கொலை

இரத்தக் களரியான பிறந்தநாள் விழா! வாக்குவாதம் முற்றி சகோதரன் வெட்டிக்கொலை

0
image

கம்பஹா – கடவத்த, இஹல பியன்வில பகுதியில் பிறந்தநாள் விழாவின் போது ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறி, 54 வயதுடைய நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கடவத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, தனது சகோதரரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட முரண்பாடு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, குறித்த நபர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கடவத்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/a-bloody-birthday-party-after-an-argument-the-brother-was-hacked-to-death-1783250802

NO COMMENTS

Exit mobile version