Home இலங்கை தேசிய லொத்தர் சபையினால் மட்டக்களப்பு மாவட்ட விற்பனையாளர்களுக்கான காப்புறுதி திட்ட உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு.

தேசிய லொத்தர் சபையினால் மட்டக்களப்பு மாவட்ட விற்பனையாளர்களுக்கான காப்புறுதி திட்ட உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு.

0
image

தேசிய ரீதியில் அரசாங்கத்தினால் வீதி ஓரங்களில் விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் புதன்கிழமை(19.08.2026) மட்டக்களப்பு மாவட்டத்தில் அங்குர்பணம் செய்து வைக்கப்பட்டது. 

தேசிய லொத்தர் சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ்.சிவகாந்த் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியம் கலந்து கொண்டு மாவட்டத்தில் முதற்கட்டமாக தெரிவு செய்யப் பட்டவர்களுக்கான காப்புறுதி திட்டத்திற்கான உறுதி பத்திரங்களை விற்பனை யாளர்களுக்கு வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்விற்கு காப்புறுதி நிறுவன பிரதிநிதிகள் மாவட்ட விற்பனை முகவர்கள், விற்பனையாளர்கள், என பலரும்  கலந்து கொண்டனர்.

தேசிய ரீதியில் ஐந்தாவது நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

இதேவேளை அரசாங்கத்தினால் விற்பனையாளர்களின் நலன் கருதி திடீர் அனர்த்த மரண காப்பறுதி மற்றும் பாரிய நோய்களுக்கான காப்புறுதி திட்டங்களும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட உள்ளமை  குறிப்பிடத்தக்கதாகும்.

Source: https://samugammedia.com/event-for-the-issuance-of-insurance-scheme-certificates-to-sales-agents-in-the-batticaloa-district-by-the-national-lotteries-board-1787135870

NO COMMENTS

Exit mobile version