Home இலங்கை இலங்கைக்கு கடத்த முயன்ற 120 சோடி புறாக்கள் பறிமுதல் – சென்னையில் இருவர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற 120 சோடி புறாக்கள் பறிமுதல் – சென்னையில் இருவர் கைது

0
image

இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தும் நோக்கில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 120 சோடி புறாக்களை தமிழக பொலிஸார் இன்று (07) காலை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தின் இராமேஸ்வரம் ஊடாக இலங்கைக்கு புறாக்களை கடத்தும் திட்டத்துடன், பாம்பன் பாலம் வழியாக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டபோது, பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் அவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழகப் பகுதிகளில் இருந்து அண்மைக்காலமாக பல்வேறு வகையான பறவைகள் இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனையிலேயே 120 பந்தய சோடி புறாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றை கடத்த முயன்றதாகக் கூறப்படும் இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தமிழக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/120-exotic-parrots-smuggled-to-sri-lanka-seized—two-arrested-in-chennai-1783403632

NO COMMENTS

Exit mobile version