Home இலங்கை இலங்கைக்கு கடத்த முயன்ற பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் பறிமுதல்

0
image

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டம், நகர உட்கோட்டம் வடக்கு பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல் இடம்பெறுவதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து திரேஸ்புரம் கடற்கரையில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திரேஸ்புரம் கடற்கரையின் வடபுறம் உள்ள வாடையில், இலங்கைக்கு கடத்துவதற்காக பதிவு எண் இல்லாத இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட பைபர் படகில் பொருட்கள் ஏற்றப்பட்டு கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

42 மூட்டைகளில் வாசனை சவர்க்காரங்கள் மற்றும் 11,520 செம்புகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரை கண்டதும் கடத்தல் கும்பல் அங்கிருந்து பொருட்களை அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 30 இலட்சம் பெறுமதியான சவர்க்காரங்கள் மற்றும் செம்புகளை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய கடத்தல் கும்பலை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/goods-worth-several-lakh-rupees-which-were-attempted-to-be-smuggled-to-sri-lanka-were-seized-1781158639

NO COMMENTS

Exit mobile version