Home இலங்கை இலங்கையின் கையிருப்பில் திடீர் உயர்வு

இலங்கையின் கையிருப்பில் திடீர் உயர்வு

0
image

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2026 ஆகஸ்ட் மாதத்தில் 4.6 சதவீதம் அதிகரித்து 6,905 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2026 ஜூலை மாத இறுதியில் 6,600 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த கையிருப்பு சொத்துக்களுடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 305 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பில், சீன மக்கள் வங்கியுடனான நாணயப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் (Currency Swap Arrangement) மூலம் கிடைத்த நிதியும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 5.1 சதவீதம் அதிகரித்து 6,690 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும், தங்கக் கையிருப்பு 9.5 சதவீதம் அதிகரித்து 210 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

Source: https://samugammedia.com/sri-lankas-stockpiles-surge-1788918687

NO COMMENTS

Exit mobile version