Home இலங்கை இலங்கையில் அடகு வைக்கப்படும் பெருமளவு தங்க நகைகள்! பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தீவிரம்

இலங்கையில் அடகு வைக்கப்படும் பெருமளவு தங்க நகைகள்! பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தீவிரம்

0
image

இலங்கை மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு சுமார்  351.45 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.

இவை சதவீத அடிப்படையில் இது சுமார் 54 சதவிகித அதிகரிப்பு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டில், நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு ரூ. 660 பில்லியனாக இருந்துள்ளதாக பேராசிரியர் கூறியுள்ளார்.

 

இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, வர்த்தக வங்கிகளிடம் நகைகளை அடமானம் வைத்துப் பெறப்பட்ட கடன்களின் அளவு ரூ. 101.1 பில்லியனாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

அன்றாட பணத்தேவை அதிகரிப்பிற்கு நாட்டின் பொருளாதார பணவீக்கமே முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நகைகளை அடமானம் வைத்தல் அல்லது விற்பனை செய்தல் காரணமாக நாட்டின் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள் இல்லாமல் போய்விட்டதாக நிதி நிறுவன அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 

Source: https://samugammedia.com/huge-amounts-of-gold-jewelry-are-being-stored-in-sri-lanka-the-impact-of-the-economic-crisis-is-severe-1784523296

NO COMMENTS

Exit mobile version