Home இலங்கை இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு – தொடரும் ரூபாய் சரிவு!

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு – தொடரும் ரூபாய் சரிவு!

0
image

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று  24 கரட் தங்கம் ஒரு பவுண் 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 4000 ரூபாயால் குறைக்கப்பட்டு 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல்,நேற்று 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 3600 ரூபாயால் குறைக்கப்பட்டு, 346,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 342.03 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் (24) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 340.06 ரூபாவாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/sudden-drop-in-gold-prices-in-sri-lanka—the-rupee-keeps-falling-1782379576

NO COMMENTS

Exit mobile version