Home இலங்கை இளம் குடும்பப் பெண் வெட்டிப் படுகொலை! – மதுபோதையில் நின்ற கணவன் கைது

இளம் குடும்பப் பெண் வெட்டிப் படுகொலை! – மதுபோதையில் நின்ற கணவன் கைது

0
image

பொலன்னறுவை, தமன்கடுவை பிரதேசத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை அவரது சொந்த வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் உயிரிழந்த பெண்ணின் கணவர், சம்பவத்தின்போது அயல் வீட்டில் மதுபோதையில் நின்ற நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படுகொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Source: https://samugammedia.com/young-housewife-hacked-to-death—drunken-husband-arrested-1789971088

NO COMMENTS

Exit mobile version