விஜய்யின் ஜனநாயகன் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் போஸ்டரிலேயே எம்ஜிஆர் reference இருந்த நிலையில் படத்திலும் அது அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஜிஆரின் “நான் ஆணையிட்டால்” பாடலை ரீமிக்ஸ் செய்து ஜனநாயகன் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.
முதல் சிங்கிள்
இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் முதல் சிங்கிள் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக போவதாக புது அப்டேட் வந்திருக்கிறது.
“தளபதி கச்சேரி” என்ற அந்த பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அனிருத் உருவாக்கி இருக்கிறாராம்.