Home இலங்கை ஈக்கள், கழிவுநீர், விலங்கு கழிவுகள் மத்தியில் வடை தயாரிப்பு! மன்னாரில் திடீர் ரெய்டு

ஈக்கள், கழிவுநீர், விலங்கு கழிவுகள் மத்தியில் வடை தயாரிப்பு! மன்னாரில் திடீர் ரெய்டு

0
image

மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த வடை தயாரிப்பு நிலையம் ஒன்று, சுகாதார அதிகாரிகளால் இன்று (23) மேற்கொள்ளப்பட்ட திடீர்  ஆய்வின்போது சுகாதார சீர்கேடுகளுடன் இயக்கியமை  கண்டறியப்பட்டு, உடனடியாக  மூடப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் மன்னார்  பொது   சுகாதார வைத்திய அதிகாரி(MOH) பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர், குறித்த வடை தயாரிப்பு நிலையத்தில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த நிலையத்தில் உணவுப் பொருட்கள் மனித  பயன்பாட்டிற்கு ஒவ்வாத வகையிலும், மிகவும் சுகாதாரமற்ற முறையிலும் தயாரிக்கப்படுவது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.

 குறிப்பாக உணவு தயாரிக்கும் இடத்தில் ஈக்கள் அதிக அளவில் காணப்பட்டது, கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படாமல் சுகாதார பாதுகாப்பின்றி தேங்கியிருந்தது, கோழிகள், புறாக்கள் மற்றும் ஏனைய செல்லப்பிராணிகள் கழிவுகள் காணப்பட்ட அசுத்தமான சூழலில் உணவு தயாரித்தமை, உணவு தயாரிக்கும் இடத்தின் ஒட்டுமொத்த சுகாதாரம் மிகவும் மோசமாக காணப்பட்டமை போன்ற குறைபாடுகள் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது.

அதனடிப்படையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த நிலையத்தில் உணவு தயாரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு உரிமையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

 சுகாதாரத்துறையினரால் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை முழுமையாக நிவர்த்தி செய்து, இடத்தை சுத்தப்படுத்தி, சுகாதாரமான முறையில் மீள் அனுமதி பெறும் வரை நிலையத்தை இயங்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதே நேரம் மன்னார் நகரப்பகுதியில் கடந்த 6 மாதங்களில் 128 உணவகங்கள் வெதுப்பகங்கள் உள்ளடங்களால சுகாதார சீர்கோட்டுடன் இயங்கிய நிறுவனக்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் அந்த உணவகங்கள் 1,892,300 ரூபா  தண்டப்பணமும் செலுத்தியுள்ளனர் 

இந்த திடீர் ஆய்வு நடவடிக்கைக்கு மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரியின்  பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/vadai-made-from-flies-sewage-and-animal-waste-sudden-raid-in-mannar-1782218728

NO COMMENTS

Exit mobile version