Home இலங்கை ஈச்சிலம்பற்றில் சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; பறிபோன இளைஞனின் உயிர்

ஈச்சிலம்பற்றில் சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; பறிபோன இளைஞனின் உயிர்

0
image

 

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் ஈச்சிலம்பற்று பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று சீமெந்து லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தோப்பூர் – செல்வநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதான அன்சார் அல்ஹாம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 26 வயதான சித்திக் சாபி என்பவர் படுகாயமடைந்த நிலையில் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் ஜனாஸா ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம். நூருல்லா ஜனாஸாவை பார்வையிட்டுள்ளார்.

இதனையடுத்து, பிரேத பரிசோதனைகளுக்காக ஜனாஸா கந்தளாய் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/a-motorbike-collided-with-a-tractor-in-eechilampar-the-young-man-involved-lost-his-life-1789631128

NO COMMENTS

Exit mobile version