Home இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை இறுதிக்கட்டத்தில்! – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை இறுதிக்கட்டத்தில்! – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவிப்பு

0
image

உயிர்த்த ஞாயிறு குண்டு்த்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க நீண்டகாலம் சென்ற நிலையில் தற்போது அதன் இறுதி கட்டத்துக்கு வந்திருக்கிறோம் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

ஹோமாக பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டு்த்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க நாங்கள் நீண்டகாலமாக முயற்சித்து வருகிறோம். தற்போது அதன் இறுதி கட்டத்துக்கு வந்திருக்கிறோம். 

அதேபோன்று போதைப்பொருள் கடத்தல்கார்களின் பிரதான சூத்திரதாரிகள் யார் என குறிப்பிட்டளவானவர்களை இனம் கண்டிருக்கிறோம். போதைப்பொருளுடன் நேரடியாக தொடர்புடைய வியாபாரிகளையே நாங்கள் ஆரம்பமாக இனம் கண்டோம். 

தற்போது உயிர்த்த ஞாயிறு பிரதான சூத்திரதாரியை போன்றே இந்த போதைப்பொருள் கட்டத்தல்களுக்கு பின்னால் இருந்த பிரதான சூத்திரதாரிகளை எங்களுக்கு கைதுசெய்ய முடியுமாகி இருந்தது. இவர்கள் மனிதர்கள் கொலை செய்யவும் பணம் எடுக்கிறார்கள். மனிதர்களை பாதுகாக்கவும் பணம் எடுக்கிறார்கள். மக்களிடமிருந்து சம்பளமும் பெறுகிறார்கள். இந்த மூன்று விடயங்களும் கடந்த காலங்கில் இடம்பெற்றிருப்பது, அண்மையில் இடம்பெற்ற கைதுகளின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோன்று இதற்கு முன்னர் ஒருபோதும் இடம்பெறாத வகையில், பொலிஸ் திணைக்களம், குற்றப்புலனாய்வு பிரிவு, வெளிநாடுகளில் மறைந்திருக்கும் போதைப்பொருள் வியாபாரிகள், திட்டமிடல் குற்றவாளிகளை சிவப்பு மற்றும் நீல பிடியாணை அடிப்படையில்  கைதுசெய்து, நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளன, தற்போது அந்த வலையமைப்பும் பதற்றமடைந்துள்ளது. அதனால் மக்கள் தற்போது நிம்மதியாக வாழமுடியுமான சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. என தெரிவித்தார். 

Source: https://samugammedia.com/live-sunday-attack-investigation-in-its-final-stages–deputy-minister-sunil-vattagal-statement-1782710581

NO COMMENTS

Exit mobile version