Home இலங்கை ஊழல் குற்றச்சாட்டாளர்களை பாதுகாக்க ஐ.தே.க. முயற்சி – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ சாடல்

ஊழல் குற்றச்சாட்டாளர்களை பாதுகாக்க ஐ.தே.க. முயற்சி – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ சாடல்

0
image

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) முயற்சித்து வருவதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டியே அமைச்சர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதோ அல்லது அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவதோ புதிதல்ல எனத் தெரிவித்த அமைச்சர், ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலும் அவர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.

ஏர்பஸ் விமானக் கொள்முதல் விவகாரத்தில் 100 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே, நீதிமன்றம் நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில், நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை, அந்தக் கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்துவதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சியை உண்மையாக நேசிப்பவர்களும், அந்தக் கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களும் கூட இந்த அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://samugammedia.com/itc-trying-to-protect-corruption-accused–minister-nalinda-jayathissa-slams-1788680867

NO COMMENTS

Exit mobile version