Home இலங்கை ஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டு கடூழிய சிறை!

ஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டு கடூழிய சிறை!

0
image

ஊழல் குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்குகொழும்பு உயர்நீதிமன்றம் இன்று (09) நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹா, சிறைத்தண்டனைக்கு மேலாக 6 இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வழக்கில் அவர் குற்றவாளியாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தார்.

அரச நிறுவனத்திற்காக வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டு அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும், இதன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு குற்றம் சாட்டியிருந்தது.

தண்டனை தொடர்பான தரப்புகளின் வாதங்களை பரிசீலித்த பின்னர், இன்று நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. 

Source: https://samugammedia.com/former-deputy-prime-minister-sarath-gunawardena-sentenced-to-4-years-rigorous-imprisonment-in-a-corruption-case-1780983147

NO COMMENTS

Exit mobile version