Home இலங்கை எங்களை அசைக்கவே முடியாது! – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டம்

எங்களை அசைக்கவே முடியாது! – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டம்

0
image

மக்களால் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நிறுவப்பட்ட எமது அரசை எதிர்க்கட்சிகளால் ஒருபோதும் அசைக்க முடியாது என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசின் தற்போதைய அரசியல் பலம் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நடந்து முடிந்த தேர்தல்களில் இந்நாட்டு மக்கள் தங்களின் தூய்மையான அரசியல் ஆணை மூலம் இந்த அரசுக்குப் பாரிய பலத்தை வழங்கியுள்ளனர். நாட்டைப் புதிய பாதையில் கொண்டு செல்வதற்காகவே மக்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை எடுத்தனர்.

மக்களின் பலத்த ஆதரவோடு இயங்கும் இந்த அதிகாரக் கட்டமைப்பை, நாடாளுமன்றத்துக்குள்ளோ அல்லது அதற்கு வெளியிலோ இருந்து கொண்டு எதிர்க்கட்சிகளால் எந்த வகையிலும் பலவீனப்படுத்தவோ அல்லது அசைக்கவோ முடியாது. 

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி முன்னோக்கி நகரும்.” – என்றார்.

Source: https://samugammedia.com/you-cant-shake-us—minister-nalinda-jayathissas-statement-1782793975

NO COMMENTS

Exit mobile version