Home இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு விரைந்த ரணில், நாமல்! சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு விரைந்த ரணில், நாமல்! சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்

0
image

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் யோசனை தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நடத்தும் விசேட கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகின்றது. 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில் நடத்தப்படும் இக்கூட்டம், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். 

இதன்போது தனிநபர் அரசியலை விட நாட்டின் மக்களின் நலனே முன்னுரிமை என்பதால், எவ்வளவு சவாலான சூழ்நிலையாக இருந்தாலும் கொள்கை அடிப்படையிலான தீர்மானங்களை எடுப்பதில் தாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் நீதித்துறை முழுமையாக சுயாதீனமாக செயல்பட வேண்டுமெனவும், நீதித்துறை அமைப்பின் மீது அரசாங்கத்தின் அரசியல் தலையீட்டை முற்றிலும் இல்லாதொழிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நோக்கத்துடனேயே எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் தாங்கள் ஒன்றுகூடியதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தையும் ஜனநாயக ஆட்சிமுறையையும் பாதுகாக்கும் வகையில் தொடர்ந்தும் செயற்படுவோம் என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்நிலையில் தற்போது பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. 

Source: https://samugammedia.com/ranil-namal-rushed-to-the-opposition-leaders-office-colombo-politics-heating-up-1784813205

NO COMMENTS

Exit mobile version