Home இலங்கை மழை அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு! செம்மணியில் ஆணிகள், சீமெந்து துண்டுடன் மேலும் 7 என்புக்கூடுகள்

மழை அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு! செம்மணியில் ஆணிகள், சீமெந்து துண்டுடன் மேலும் 7 என்புக்கூடுகள்

0
image

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை, 07 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்றைய தினம் மூன்று என்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆணிகளும் சீமெந்து துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 95 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 478 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 464 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Source: https://samugammedia.com/rain-got-along-with-the-childs-little-nests-in-the-red-soil-men-with-a-clump-of-mud-and-7-more-little-nests-1784813812

NO COMMENTS

Exit mobile version