Home இலங்கை எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரிப்பு – பிரதமர் தகவல்

எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரிப்பு – பிரதமர் தகவல்

0
image

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட தொகை, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் உலகளாவிய மசகு எண்ணெய் விலைகள் மற்றும் எரிபொருள் இறக்குமதிச் செலவுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (21) எழுப்பப்பட்ட வாய்மொழி வினாவுக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக சுமார் 3,168 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

எனினும், 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக 1,995 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, கடந்த ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிச் செலவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/increase-in-fuel-import-costs–prime-ministers-update-1787301191

NO COMMENTS

Exit mobile version