Home இலங்கை எல்நினோ தாக்கம்… இலங்கையில் மின்வெட்டு அபாயமா?

எல்நினோ தாக்கம்… இலங்கையில் மின்வெட்டு அபாயமா?

0
image

எல்நினோ நிலைமை காரணமாக எதிர்காலத்தில் இலங்கையில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை, வெப்பம் மற்றும் வறட்சியால் நீர் ஆதாரங்கள் வற்றும் பட்சத்தில், நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படக்கூடும் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் மின்சார உற்பத்திக்கும் தேவைக்கும் இடையில் பற்றாக்குறை ஏற்பட்டால், மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான விலைகள் தொடர்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/el-nino-impact-is-there-a-risk-of-power-outages-in-sri-lanka-1787573501

NO COMMENTS

Exit mobile version