Home இலங்கை ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு!

ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு!

0
image

ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு  

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று(05) முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி  வைக்கப்பட்டன.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம்(05) ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் ஏற்ப்பாடு செய்யப்பட்ட மரநடுகை  செயல்திட்டம்  சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் இராசலிங்கம் கஜரிஷியன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கயிலாயநாதன் சுதர்சன் சமூக சேவகர் ஒட்டுசுட்டான் புதிய ஞானகலா அரிசி ஆலை உரிமையாளர் இராமசாமி கணபதிப்பிள்ளை (குட்டி) 592 ஆவது படைப்பிரிவு கட்டளை தளபதி, ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர். 

இவர்களோடு வைத்தியர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் வைத்திய சாலை ஊழியர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொணடு  இந்த மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

Source: https://samugammedia.com/300-saplings-planted-in-the-premises-of-the-oddusuttan-regional-hospital-1780659598

NO COMMENTS

Exit mobile version