Home இலங்கை வறட்சியால் 7 மாவட்டங்களில் 1.15 இலட்சம் பேர் பாதிப்பு – தொடர்ந்தும் குடிநீர் விநியோகம்

வறட்சியால் 7 மாவட்டங்களில் 1.15 இலட்சம் பேர் பாதிப்பு – தொடர்ந்தும் குடிநீர் விநியோகம்

0
image

வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு தொடர்ந்தும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 35,149 குடும்பங்களைச் சேர்ந்த 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக DMC சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, பாதிக்கப்பட்ட 35 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 113,354 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதில் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 12,732 குடும்பங்களைச் சேர்ந்த 41,360 பேருக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11,142 குடும்பங்களைச் சேர்ந்த 33,394 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 5,435 குடும்பங்களைச் சேர்ந்த 20,418 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, வறட்சியான வானிலையால் அம்பாறை, அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

Source: https://samugammedia.com/due-to-drought-115000-people-affected-in-7-districts–drinking-water-supply-continues-1788693749

NO COMMENTS

Exit mobile version